TATA நிறுவனம் பற்றிய ஒரு சிறுதகவல்கள்--தமிழில்- இந்தியர்கள் நினைவில் கொள்ள வேண்டிய நபர்.
தயாரிப்புகள் மற்றும் சேவைகள்:
டாட்டா குழுமம் ஆறு கண்டங்களில் 85 நாடுகளுக்கும் மேலாக தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, மேலும் அதன் நிறுவனங்கள் 80 நாடுகளுக்கு அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. டாட்டா குழுமமானது அதன் ஏழு வணிகப் பிரிவுகளில் 114 நிறுவனங்களையும் துணைநிறுவனங்களையும் கொண்டுள்ளது , அவற்றில் 27 வெளிப்படையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
TATA வின் அங்கங்கள் :
இந்நிறுவனம் இரும்பு, வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, மின்சாரம், தேயிலை மற்றும் மருத்துவ வசதி ஆகிய துறைகளில் பங்குகளைக் கொண்டுள்ளது, அதாவது டாட்டா ஸ்டீல், கோரஸ் ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா டெக்னாலஜீஸ், டாட்டா டீ, டைட்டன் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா பவர், டாட்டா கம்யூனிகேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் தாஜ் ஹோட்டல்ஸ் உள்ளிட்டவை இந்தக் குழுமத்தின் முக்கிய பங்குவகிக்கின்ற நிறுவனங்கள் ஆகின்றன.
வாரிசு வழிநடத்தும் TATA :
நிறுவனமானது தற்போது குடும்ப வாரிசுகளின் அடிப்படையில் அதன் ஐந்தாம் தலைமுறையில் உள்ளது. இந்தக் குழுமமானது அதன் நிறுவனர் ஜாம்சேத்ஜி டாட்டாவின் பெயரைக் கொண்டுள்ளது, இவரது குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் குழுமத்தின் நிலையான தலைவராக இருக்கின்றார். டாட்டா குழுமத்தின் தற்போதைய தலைவர் ரத்தன் டாட்டா, இவர் ஜே. ஆர். டி. டாட்டாவிடமிருந்து 1991 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுள்ளார். மேலும் உலகமய காலகட்டத்தில் இவர் தற்போது முக்கிய சர்வதேச வர்த்தகப் புள்ளிகளில் ஒருவராக உள்ளார்.
ரத்தன் டாட்டா :
டாட்டா குழுமத்தின் தலைவர்
ரத்தன் டாட்டா
மும்பையின் வளமும் புகழும் மிகுந்த டாடா குடும்பத்தில் ரத்தன் டாடா பிறந்தார். அவர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ரத்தன், டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா வின் கொள்ளுப் பேரனாவார். பிரித்தானிய இந்தியாவில் பம்பாயில், 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர்), ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரின் தொகுதியாக விரிவாக்கிய தொழில் திரளாக விளங்கும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார்
TATA விருதுகளும் அங்கிகாரங்களூம்:
💠இந்தியாவில் பல்வேறு அமைப்புகளில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றும் ரத்தன் டாடா, வணிகம் மற்றும் தொழில்கள் குறித்த பிரதம மந்திரியின் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு ப்பின், ரத்தன் டாடாவை இந்தியாவின் மிகவும் நன்மதிப்பு பெற்ற வணிகத் தலைவர் என்று குறிப்பிட்டு, அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று போர்ப்ஸ் இதழ் கருத்து வெளியிட்டது
💠மிட்சுபிஷி கார்பரேஷன், அமெரிக்க பன்னாட்டுக் குழுமம், ஜேபி மார்கன் சேஸ் மற்றும் பூஸ் ஆலன் ஹாமில்டன் ஆகிய அமைப்புகளின் பன்னாட்டு ஆலோசனை வாரியங்களின் உறுப்பினராக உள்ளமை, ரத்தன் டாடாவின் வெளிநாட்டுத் தொடர்புகளுள் அடங்கும். மேலும் அவர், RAND கார்பரேஷன், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் அவர் கல்வி கற்ற, கார்நெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.தென்னாப்பிரிக்கக் குடியரசின் பன்னாட்டு முதலீட்டு மன்றத்தின் குழு உறுப்பினராகவும், நியூயார்க் பங்குச் சந்தையின் ஆசிய-பசிபிக் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார். கிழக்கு-மேற்கு மையத்தின் ஆளுகைக் குழுவிலும், RAND's மையத்தின் ஆசிய-பசிபிக் கொள்கை மைய ஆலோசனைக் குழுவிலும் டாடா உறுப்பினராக உள்ளார். மேலும், அவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய AIDS திட்டத்தின் குழுவிலும் பணியாற்றுகிறார்.
💠26 ஜனவரி 2000 அன்று, 50 ஆவது இந்தியக் குடியரசு தினத்தையொட்டி, படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம பூஷண் விருது, ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.
2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள, தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவிற்கு ரத்தன் டாடாவை தேர்ந்தெடுத்தார்கள்.
2006 ஆம் ஆண்டில், பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான FIRST விருது அவருக்கு வழங்கினார்கள்.
மார்ச் 2006 ஆம் ஆண்டில், பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி, கார்நெல் பல்கலைக்கழகம் டாடாவை கௌரவித்தது. வணிகத் துறையில் சிறப்பு வாய்ந்த தனியருக்கு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இவ்விருது மிகப்பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.
2008 ஆம் ஆண்டிற்கான NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவ்விருது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று மும்பையில் வழங்கினார்கள். 2007 ஆம் ஆண்டு வழங்கிய, நற்பணிகளுக்கான கார்னகி பதக்கத்தை, டாடா குடும்பத்தின் சார்பாக, ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டார்.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்ச்யூன் இதழ் வெளியிட்ட மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார்.
💠2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், டைம் இதழ் வெளியிட்ட, உலகின் மிக செல்வாக்குடைய நூறு பேர் அடங்கிய பட்டியலில் திரு டாடா இடம் பிடித்தார். டாடா, ஒரு இலட்ச ரூபாய் காரான நானோவை தயாரித்து வெளியிட்டதற்குப் பெரிதும் புகழப் பெற்றார்.
படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூஷண் விருது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அவருக்கு வழங்கினார்கள்.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கௌரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாடாவுக்கு வழங்கியது. தீவு நாடான அதனுடன் தொடர்ந்த வணிக உறவையும், சிங்கப்பூரில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு அவரது பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இதை வழங்கினார்கள். இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியர் ரத்தன் டாடா ஆவார்.
💠2009 ஆம் ஆண்டில் அவர் மதிப்பார்ந்த பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவராக (honorary Knight Commander of the British Empire) நியமிக்கப்பட்டார்.
ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் வழங்கிய வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டம்; பாங்காக்கில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் வழங்கிய தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டம்; வாரிக் பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம்; மற்றும் லண்டன் ஸ்கூல் ஒப் எகொநோமிக்ஸ் வழங்கிய கௌரவ பெல்லோஷிப் ஆகியவை அவர் பெற்ற பிற விருதுகளாகும்
மேலும் தகவல்களுக்கு:
http://www.tata.com/
நன்றி..! நன்றி..! நன்றி....!
👑KMR
கருத்துகள்
கருத்துரையிடுக